காமராஜர் 1967 இல் தோற்றதற்கு முக்கிய காரணங்கள்:
1. ஹிந்தி மொழி பிரச்சனை (எல்லோருக்கும் தெரிந்தது)
2. பக்தவத்சலதிற்கு கூறும் அளவிற்கு திறமை இல்லாதது, மக்கள் அவர் ஆட்சியில் பல பிரச்சனை எதிர் கொண்டு இன்ருந்திருக்கிரர்கள் அதில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு முக்கியமான காரம் அதிலும் அரிசி விலை உயர்வு முக்கியமான் ஒன்று. அப்பொழுது தேர்தலின் பிரட்சரங்களில் பல கேலி வாக்கியங்கள் எழுந்தன. அதில் ஒன்று "காமராஜர் அண்ணாச்சி கடலை பருப்பு விலை என்னாச்சு? பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி?"
3. எம் ஜி இராமச்சந்திரன் கழுத்தில் சுடப்பட்ட சம்பவமும் ஒரு முக்கியமான காரணம் (அனுதாப ஓட்டிற்கு). அவர் மருத்துவமனையில் கவலை கடமாக இருந்த புகை படங்களை தேர்தல் பிரசாரத்திற்கு உபயோகம் செய்தனர்)
http://www.pandia.in/files/mgr.jpg4. இன்னொரு முக்கியமான காரணம், அந்த தேர்தலில் தான் திராவிட முன்னேற்ற கழகம் 5 கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று மக்களை கவர்ந்தது. இப்பொழுது உள்ள கிலோ 2 ரூபாய் திட்டத்தை போல. ஆனாலும் ஆட்சியை பிடித்த உடன் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
5. காமராஜருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு சிறிய விபத்து நேர்ந்தது அதனால் அவரால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அப்பொழுது அவர் "படுத்து கொண்டே ஜெயப்பேன்" என்று கூறிய வாக்கியம், அவர் தோற்ற பின் பலரால் கேலி செய்ய பட்டது.
6. எம் ஜி ராமச்சந்த்ரரின் சினிமா காட்சி, வசனங்கள் மக்களை எளிதாக கவர்ந்தது (காஞ்சி தலைவன், அரசகட்டளை, விவசாயி, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா, நான் ஆணையிட்டால், ...)
7. அந்த தேர்தலில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஸ்வதந்திரா(இராஜாஜி இன் கட்சி) கட்சிகள் திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்தனர். இதை காங்கிரஸ் மற்றும் காமராஜரை வெறுத்து செய்த கூட்டு சதி என்றும் கூறலாம். பின்னர் 1971 இல் ராஜாஜி காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்தாலும் அந்த தேர்தலின் போது மக்களின் சுயநலம் தலை விரித்து ஆட தொடங்கிவிட்டது.
8. எல்லோருக்கும் ஒரு மிக்கியமான கேள்வி என்னவென்றால் எப்படி அப்பச்சி விருதுபட்டியிலே தோற்று விட்டார் என்பது தான். அந்த சமயத்தில் கள்ள நோட்டு விவகாரம் விருதுபட்டி, சிவகாசி, மற்றும் சாத்தூரில் தலை விரித்து ஆடியது. அதற்கு முக்கிய காரணம் அங்கு இருந்த பணக்கார கூட்டங்களில் சிலர். காமராஜர் அனைவரையும் கடுமையாக தண்டித்துவிட்டார். அவர்கள் காமராஜரின் ஜாதி என்ற போதிலும் அவர்களுக்கு காமராஜர் மீது பின்னணியில் காமராஜரை தோற்கடிக்க திட்டம் இட்டனர். இது கடைசு வரை காமராஜரின் கண்ணிற்கு தென்படவில்லை. கடும் வெறுப்பு எழுந்துவிட்டது. அவர்கள் சீனிவாசன் மற்றும் சில மாணவர்களை பயன்படுத்தி பின்னணியில் காமராஜரை தோற்கடிக்க திட்டம் இட்டனர். இது கடைசு வரை காமராஜரின் கண்ணிற்கு தென்படவில்லை.